Rapido பைக்-டாக்ஸிக்கு எதிராக பெங்களூருவில் உள்ள டாக்சி சங்கங்கள் மற்றும் ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக ஏற்பட்ட பெரும் அழுத்தத்தைத் தொடர்ந்து, Yeshwantpur RTO அதிகாரிகள் Rapidoவின் கீழ் பதிவு செய்யப்பட்ட 120 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பைக் டாக்சிகளாகப் பயன்படுத்த அங்கீகாரம் இல்லாத ஒயிட் போர்டு வாகனங்கள் என்ற காரணத்தைக் கூறி நான்கு மணி நேரத்தில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த முழு சம்பவமும் போக்குவரத்துக் கூடதல் ஆணையர் (அமலாக்கம்), L. நரேந்திர ஹோல்கரால் உறுதி செய்யப்ப் பட்டது. தனது அறிக்கையில் அவர், இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அல்லது ஆட்டோரிக்ஷாக்கள் என எந்த வகையிலும் ஒயிட் போர்டு வாகனங்களை டாக்சிகளாகப் பயன்படுத்த அனுமதி இல்லை என்று கூறினார். சமீப காலத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்களின் புகாரின்படி பல வயிட் போர்டு வாகனங்கள் சட்டவிரோதமாக பெங்களூருவின் சாலைகளில் தக்க ஆவணங்களின்றி பயன்படுத்தப்ப்டது தெரிய வந்தது.
பொதுச் சாலைகளில் பைக் டாக்சிகளைப் பயன்படுத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது என்று திரு ஹோல்கர் கூறியிருந்தாலும், Rapido மற்றும் அதன் பைக் டாக்சி ஓட்டுபவர்கள் மீது எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கைக்கும் எதிராக Rapido தடை உத்தரவைப் பெற முடிந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் திரு ஹோல்கர், குறிப்பாக Rapido மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், ஒயிட் போர்டு வாகனங்களாக இயங்கும் நகரத்தில் உள்ள அனைத்து பைக் டாக்சிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இருப்பினும், உண்மையான சூழ்நிலை முற்றிலும் மாறாக உள்ளது, ஏனெனில் கைப்பற்றப்பட்ட அனைத்து பைக்குகளும் Rapidoவுக்கான டாக்சிகளாக மட்டுமே இயக்கப்படுகின்றன.
பைக் டாக்சிகள் சட்டவிரோதமானது
ஹோல்கர் தனது அறிக்கையின் முடிவைச் சேர்த்து, நகரத்தில் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படும் பைக் டாக்சிகள், ஏதேனும் விபத்து அல்லது அசம்பாவிதம் ஏற்பட்டால், வாகனம் அல்லது உயிர்களை இழக்க நேரிடும் பட்சத்தில், அவை காப்பீட்டிற்கு பொறுப்பேற்காது என்பதையும் உறுதிப்படுத்தினார். யாரேனும் சட்டவிரோதமாக பைக் டாக்ஸி ஓட்டுவது கண்டுபிடிக்கப்பட்டால், விதிகளை மீறியதற்காக அவருக்கு ரூ.10,000-15,000 அபராதம் விதிக்கப்படும்.
இந்த விவகாரம் குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய Rapidoவின் இணை நிறுவனர் பவன் குண்டுபல்லி, ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்கள் பைக் டாக்சிகளுக்கு போட்டியாக எதிர்ப்புத் தெரிவிப்பதால், சரியான காரணமின்றி பைக் டாக்சி ஓட்டுநர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று கூறினார். Rapido ஒரு சட்டத்தை மதிக்கும் நிறுவனம் என்றும், சட்டத்தின் எல்லைக்கு உட்பட்டு செயல்பட்டு வருவதாகவும், அதன் இருப்பைக் கொண்டிருக்கும் அனைத்து மாநிலங்களிலும் வழக்கமான வரி செலுத்தும் நிறுவனம் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
பெங்களூருவில் பைக் டாக்சிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக முன்னாளில் கடும் போராட்டம் நடத்தியபோது ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்களுக்கும் பைக்-டாக்சி நடத்துபவர்களுக்கும் இடையிலான போட்டி மோசமான திருப்பத்தை எட்டியது. ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள், பைக் டாக்ஸிகளைப் போல தாங்களும் வயிட் போர்டுடன் சாலையில் ஓட்ட அனுமதிக்கப்பட வேண்டுமென கூறுகின்றனர். Rapido போன்ற பைக் டாக்ஸி நிறுவனங்களால் தங்களுக்கு பெறும் நெருக்கடியான போட்டியாளர்களாக இருப்பதாகவும் COVID-இனால் ஏற்கனவே பாரிய இழப்புகளைச் சந்தித்த அவர்கள் இதனால் தனது விலைகளை மேலும் குறைக்கும் நிலைக்குத் தள்ளப் படுவதாகவும் ஆட்டோ ரிக்ஷா ஓட்குநர்கள் கூறுகின்றனர்.